--> -->

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை பெற்றுக்கொள்ளல்

ஒக்டோபர் 07, 2020

கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை பெற்றுக்கொள்ளலவும் பொலிஸ் தொடர்பான ஏனைய தகவல்களை பெற்றுக் கொள்ளவும் பின்வரும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர ஆகியோரையே தொடர்பு கொண்டு உத்தியோகபூர்வ தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன - 0718 592 600, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர - 0718 591 864 ஆகிய  கொண்டு  தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு  உத்தியோகபூர்வ தகவல்களை பெற்றுக் கொள்ளமுடியும்.

இதேவேளை, பொலிஸ் ஊடக பிரிவினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் ஊடக அறிக்கைகள் மற்றும் பொலிஸ் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்களை தவிர்ந்த ஏனைய முறையில் பெற்றுக் கொள்ளப்படும் தகவல்கள் உத்தியோகபூர்வமான தகவல்கள் அல்ல எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.