--> -->

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளில் பொதுமக்கள் நலன்கருதி அத்தியாவசிய சேவைகள் நிலையங்கள் திறப்பு

ஒக்டோபர் 09, 2020

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள 18 பொலிஸ் பிரிவுகளிலும் பொதுமக்களின் நலன்கருதி அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

இதன் பிரகாரம், இன்று (ஒக்டோபர், 09) காலை 8.00 மணிமுதல் மாலை  8.00 மணிவரையான காலப்பகுயில் சதோச, பாமசி, சுப்பர் மார்க்கெட் மற்றும் மீன் கடைகள் என்பன திறந்திருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹான தெரிவித்தார்.
 
பொதுமக்கள் இச்சேவையினை பெற்றுக் கொள்வதற்காக அருகிலுள்ள நிலையங்களுக்கு செல்லும் போது சுகாதார நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதுடன், பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே செல்ல வேண்டும் என பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.