--> -->

எதிர்வரும் நாட்களில் கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ஒக்டோபர் 10, 2020

நாடு முழுவதும் குறிப்பாக நாட்டின் தென் மேற்கு பகுதிகளில் ஆரம்பமாகியுள்ள தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்று இரவிலிருந்து எதிர்வரும் சில நாட்களில் தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்  அறிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்  மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ சில நேரங்களில் நிகழக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன், வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல்வேளையில் அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, மற்றும் ஊவா மாகாணத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு  வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, ஒக்டோபர் 13 திகதி வரை குறைந்த தாழமுக்கம் காணப்படுவதால் கடற்படை மாற்றம் மீன்பிடி  சமூகங்கள்  வடக்கு அந்தமான் கடலுக்கு அப்பாலுள்ள கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம்  விடுத்துள்ள கப்பல் அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.