--> -->

மருந்துகளை வீடுகளுக்கு சென்று விநியோகிக்க நடவடிக்கை – சுகாதார அமைச்சு

ஒக்டோபர் 12, 2020

அரசாங்க வைத்தியசாலைகளில் மாதாந்தம் சிகிச்சை பெற்றுவரும் தொற்றா நோயாளர்கள் மற்றும் வயோதிப நோயாளர்கள் மறு அறிவித்தல் வரை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு சமூகமளிக்க வேண்டாம் என அறிவித்துள்ளதுடன், அவர்களுக்கான மருந்துகளை அவர்களது வீடுகளுகு சென்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள  ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலடைவதை கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சினால் நேற்று (ஒக்டோபர், 11)  வெளியிட்டுள்ள இவ் அறிக்கையில் தொற்றா நோயாளர்கள் மற்றும் வயோதிப நோயாளர்கள் இவ்வைரஸ் தக்கத்திற்குள்ளவது ஆபத்தானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், அரச வைத்தியசாலைகளில் மாதாந்த சிகிச்சை பெரும் நோயாளர்களுக்கான மருந்துகள் நாளை (13) முதல் அவர்களது வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் முதலில் அமுல்படுத்தப்பட்டு பின்னர் ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

நோயாளிகள் கொரோனா வைரஸ் நோயின் அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால், எந்த நேரத்திலும் அருகிலுள்ள வைத்தியசாலையின்  அவசர சிகிச்சை பிரிவுகளுக்குச் செல்லுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.