--> -->

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் கடுமையாக அமுல், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு மூடப்படும்

ஒக்டோபர் 13, 2020

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள  பகுதிகளில் இன்று (ஒக்டோபர், 13) முதல் 03 நாட்களுக்கு சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் ஏனைய  கடைகளும் மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்வதாகவும்  இப்பகுதிகளில்  மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.