--> -->

7,682 பீசீஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

ஒக்டோபர் 27, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 541 பேர் நேற்றைய தினம் புதிதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 8,413 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளங் காணப்பட்ட அனைவரும் உள் நாட்டுப் பிரஜைகள் என அப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை கொத்தணியில் வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,941 ஆக அதிகத்துள்ள அதேவேளை, இவர்களில் 1,041 பேர் ஆடை உற்பத்தி நிறுவனத்தின் ஊழியர்கள் என கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இராணுவத்தினரின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் 75 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 8,090 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை நாட்டில் 458, 518 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 7,682 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக பதிவாகியுள்ளது.

Tamil