--> -->

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

நவம்பர் 13, 2020

இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ் ஐ. ஷ்கொடா பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (நவம்பர், 13)  சந்தித்தார்.

கேர்ணல் ஷ்கொடா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கிடையில்  பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும்  பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.