--> -->

8,743 பீசிஆர் பரிசோதனைகள் நோற்று முன்னெடுப்பு

நவம்பர் 18, 2020

நாட்டில் 8,743 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாகவும் இதில் வைரஸ் தொற்றுக்குள்ளான 401 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணிகளில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14,564 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கொழும்பு 10, கொழும்பு 02, தெமட்டகொடை, ரத்மலானை மற்றும் கிருலப்பனை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இதற்கமைய வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66 ஆக  பதிவாகியுள்ள அதேவேளை 18,075 அதிகரித்துள்ள தாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 33 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 3, 223 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.  

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணிய 30,000 ற்கும் மேற்பட்ட முதல் மற்றும் இரண்டாம் நிலை தொடர்பாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.