--> -->

கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 4வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம்

நவம்பர் 30, 2020

இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையிலான  கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம்  இலங்கையின் தலைமையில் இடம்பெற்றது. கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முதலாவது சந்திப்புக் கூட்டம் 2011ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் இலங்கையில் தற்போதைய  ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் முன் முயற்சியினால் இடம்பெற்றது. தொடர்ச்சியான முறையில் வெற்றிகரமாக இடம்பெற்று வந்த இந்த கூட்டம்,   இறுதியாக ஆறு வருடங்களுக்கு முன் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவின் புதுடில்லி நகரில்  நடைபெற்றது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் தொடர்ந்து இடம்பெறவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின் வழிகாட்டலின் கீழ், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான 4 வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் நவம்பர் 28ம் திகதி கொழும்பில் நடாத்தப்பட்டது.

கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பொதுவான பிரச்சினைகள் குறித்து இந்து சமுத்திரு பிராந்தியத்தில் அர்த்தமுள்ள ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான இந்த கூட்டத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் மூன்று பங்கேற்பு நாடுகளும், இருபத்தோராம் நூற்றாண்டில் வளர்ந்து வரும் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்புச் சூழலால் முன்வைக்கப்படும் மூலோபாய கடல்சார் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களின் முழு அளவையும் ஆராய்ந்ததாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுடன்   இணைந்து  வெளியிட்ட  கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின் அழைப்பின் பேரில்  இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவல் கே.சி., மாலைதீவு குடியரசின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் உசா மரியா அஹமட் தீதி ஆகியோரின் தலைமையிலான பிரதிநிதிகள் குழு கொழும்புக்கு வருகை தந்தது. இந்து சமுத்திரதின் மூலோபாய புறக்காவல் நிலையத்தின் செயல்பாடுகளை அடைய முடியும் என்பதால் சீஷெல்ஸ் மற்றும் மொரீஷியஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள்  இந்த முத்தரப்பு கூட்டத்தின் இணையவழி  பார்வையாளர் நாடுகளாக பிரதிநிதித்துவப்படுத்த அழைக்கப்பட்டன.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடல்சார் புல விழிப்புணர்வு, சட்டப்பூர்வ ஆளுகை, தேடல் மற்றும் மீட்பு, கடல்சார் மாசுறுதலை தவிர்த்தல், தகவல் பகிர்வு, தகவல் பகிர்வு, கொள்ளைகள், போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத பொருட்கள் கடத்தல் ஆகியவற்றை ஒன்றினைந்து கட்டுப்படுத்தும் நோக்கிலேயே  கடல்சார் பாதுகாப்பு  தொடர்பான உயர் மட்ட முத்தரப்பு கூட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது

மூன்று பங்கேற்பு நாடுகளும்  இப்பிராந்தியத்தில் நடப்பு கடல்சார் பாதுகாப்பு சூழல் தொடர்பில் அக்கறை செலுத்தியதுடன் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த  நிவாரணம், கூட்டு பயிற்சிகள், கொள்ளை, கடல் மற்றும் நீருக்கடியில் பாரம்பரியம் மற்றும் எண்ணெய் கசிவினை தடுத்தல் ஆகியற்றில்  பரஸ்பர ஒத்துழைப்பு வழங்குதல் தொடர்பாகவும் கலந்தாலோசித்தன.

பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொண்ட மூன்று நாடுகளும் புலனாய்வு பகிர்வு மற்றும் பயங்கரவாதம், தீவிரவாதம், தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல், ஆயுத கடத்தல் மற்றும் ஆட்கடத்தல், நிதி மோசடி, இணைய பாதுகாப்பு மற்றும் கடல் சார்  காலநிலை மாற்றத்தின் விளைவுள் தொடர்பில் தகவல் பகிர்வினை பகிர்வினை மேம்படுத்தவும் ஒப்புக்கொண்டன.

இந்து சமுத்திர பிராந்தியத்தின்  சுற்றுச்சூழல் நிலைப்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்ட இந்த கூட்டத்தின் பங்கேற்பாளர்கள், இந்த கூட்டத் தொடரின் எதிர்கால நிகழ்வுகளை 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு' என அழைப்பதற்கும் மூன்று நாடுகளின் பங்கேற்பாளர்களும் ஒப்புதல் அளித்தனர்.

இரண்டு நாட்களைக் கொண்ட இந்த கூட்டத் தொடரில்  உடன்பாடுகள்  சில கைச்சாத்திடப்பட்டதுடன் இதனை நினைவு கூறும்வகையில் மூன்று நாடுகளினதும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட பாதுகாப்பு வல்லுனர்களிடையே  நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.