--> -->

பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு

டிசம்பர் 09, 2022

பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ரொலாண்டோ பி கோமஸ் இன்று (டிசம்பர் 09) பத்தரமுல்ல அக்குரேகொடவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவை சந்தித்தார்.
 
கேர்ணல் கோமஸுக்கு அன்பான வரவேற்பை வழங்கிய பின்னர், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் குணரத்ன பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு ஆலோசகருடன் சுமுகமாக கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது, பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
 
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஜெனரல் குணரத்ன மற்றும் கேர்ணல் கோமஸ் இருவரும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.
 
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்துகொண்டார்.