--> -->

மறைந்த லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எல் தேசப்பிரியவின் பூதவுடலுக்கு
மாலியில் உள்ள ஐ.நா படையினர் அஞ்சலி

பெப்ரவரி 21, 2023

(ஊடக வெளியீடு)

மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியின் (மினுஸ்மா) படையினர் (16) வியாழக்கிழமை, 6 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த மறைந்த லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எல் தேசப்பிரிய (42) அவர்களின் பூதவுடலுக்கு இராணுவ மரியாதை செலுத்தினர். இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதனால் மினுஸ்மா பமகோ தளம் – 3 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது 11 பெப்ரவரி 2023 அன்று காலமானார்.

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணியில் உள்ள மினுஸ்மா படையினர் இராணுவ மரபுகளுக்கு இணங்க சம்பிரதாயமான இராணுவ அணிவகுப்பின் போது கொடிகளை இறக்கி மரியாதை செலுத்தியதுடன் சவப்பெட்டிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்படுவதற்கு முன்பு பொதுச்செயலாளரின் சிறப்பு பிரதிநிதி திருமதி டேனியலா க்ரோஸ்லாக் ஐ.நா கொடியினை போர்த்தினார். மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் பல பரிமாண ஒருங்கிணைந்த நிலைப்படுத்தல் பணி மினுஸ்மா பணிகளின் துணைத் தலைவர் மினுஸ்மா அதிகாரிகள் மற்றும் மினுஸ்மாவின் இலங்கை போர் போக்குவரத்து குழுவின் கட்டளை அதிகாரி உட்பட சிப்பாய்களின் முன்னிலையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

மதவச்சியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான காலஞ்சென்ற லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எல் தேசப்பிரிய (42) அவர்களின் பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக விரைவில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. (முடிவு)

நன்றி - www.army.lk