--> -->

இலங்கை விமானப்படை கதிரியக்க உபகரண தொகுதியை பெற்றுக்கொண்டது

டிசம்பர் 10, 2020

சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட அபிவிருத்தி அமைச்சர் கெளரவ . துமிந்த திசானாயக்க விஷேட கதிரியக்க பொருள் கண்டறிதல் மற்றும் கதிரியக்க அளவீட்டு கருவி தொகுதி ஆகியவற்றை இலங்கை விமானப்படைக்கு வழங்கி வைத்தார்.

கொழும்பில் உள்ள அமைச்சில் வைத்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன நேற்றய தினம் (டிசம்பர் 9) இந்த  நன்கொடையை பெற்றுக்கொண்டார்.

இந்த உபகரண தொகுதியானது விமானப்படையின் இரசாயனவியல்  உயிரியல் கதிரியக்க அணு மற்றும் வெடிபொருட்கள் (CBRNE) பிரிவின் திறன்களை மேம்படுத்தவுள்ளது.

இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு  (SLAERC) இலங்கையில் அணுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நோக்கத்துடன் தொடர்புடைய பங்குதாரர்களுக்கு உதவுகிறது.

நாட்டில் ஏற்படும் ஒரு அணுசக்தி அல்லது கதிரியக்க சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஏழு முக்கிய பங்குதாரர்களில் விமானப்படையும் ஒன்றாகும்.

இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி. டீஎம்எஸ் திஸாநாயக்க இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. எச்எல் அணில் ரஞ்ஜித் ஆகியோரும் இந்த நிகழ்விற்கு  தமது பங்களிப்பை வழங்கினர்.

இந்த கருவிகளின் திறனைக் கொண்டு இலங்கை சர்வதேச விமான நிலையங்கள் மூலம் அணுசக்தி மற்றும் கதிரியக்கப் பொருட்களின் கண்டறிதலே விமான படையின் முக்கிய நோக்கமாகும்.

இந்த நிகழ்வில் விமானப்படையின் களமுனை நடவடிக்கைப் பணிப்பாளரும்  இரசாயனவியல்  உயிரியல் கதிரியக்க அணு மற்றும் வெடிபொருட்கள் பிரிவின் கட்டளை அதிகாரியுமான  விங்க் கொமாண்டர் நிலந்த்ரா பெரேரா கலந்து கொண்டார்.