--> -->

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

மார்ச் 20, 2023

பதுளை, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் ஏற்படலாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (மார்ச் 20) காலை வேளையில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இதேவேளை பதுளை, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், நாகொட மற்றும் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள், எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவு, காலி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்கள், உக்குவெல, ரத்தோட்ட, வில்கமுவ மற்றும் நாவுல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் மாத்தளை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.