--> -->

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழு பிரதானி ஆகியோர் மிஹிந்து செத் மெதுரவில் போர் வீரர்களுடன் எண்ணங்கள் பகிர்வு

மார்ச் 25, 2023

கௌரவ. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், ஜனாதிபதி பணிக்குழு பிரதானியும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் திரு.சாகல ரத்நாயக்க ஆகியோர் வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களின் நலன்புரி நிலையமான அத்திடியவில் உள்ள மிஹிந்து செத் மெதுரவிற்கு அவர்களின் நலன்அறிவதற்கு விஜயம் செய்தனர்.

விஜயம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழு பிரதானியும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ஆகியோரை மிஹிந்து செத் மெதுர நுழைவாயிலில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் மிஹிந்து செத் மெதுர தளபதி பிரிகேடியர் டி.எஸ் பாலசூரிய ஆகியோரால் வரவேற்கப்படுவதுற்கு முன்னர் இராணுவ பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அதன்பிறகு அன்றைய விருந்தினர்கள் மிஹிந்து செத் மெதுர விடுதிகளுக்கு சென்று காயமுற்ற 28 போர்வீரர்களின் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடைமுறைகள் தொடர்பில் பார்வையிட்டனர். அவர்கள் காயமடைந்த போர் வீரர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதுடன் அவர்களின் தேவைகளை விசாரித்தனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அன்றை தினம் விஜயம் செய்தோர் தேநீர் விருந்துபசாரத்தின் போது போர் வீரர்களுடன் உரையாடிதுடன் மே 2009 க்கு முன்னர் நாட்டின் ஒற்றையாட்சியக்காக தங்கள் கால்கள் மற்றும் கால்களை தியாகம் செய்த வீரர்களுக்கு சிறப்பு பரிசு பொதிகளை வழங்கினர்.

அவர்கள் புறப்படுவதற்கு முன், மிஹிந்து செத் மெதுர விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் கருத்துக்களைப் பதிவு செய்த பின்னர், விருந்தினர்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு நினைவுச் சின்னங்களை வழங்கினார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திரு தனுஷ்க ராமநாயக்கவும் இந்த நிகழ்ச்சியுடன் இணைந்திருந்தார்.

இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜி டப்ளியூ டப்ளியூ டப்ளியூ டப்ளியூ எம் சி பி விக்ரமசிங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி, சில சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் இந்த நிகழ்வின் போது கலந்து கொண்டனர்.

நன்றி - www.army.lk