--> -->

சுகயீனமுற்ற மீனவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார்

மே 26, 2023

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் இன்று (மே 26) கரைக்கு கொண்டுவரப்பட்டார்.

இலங்கை கடற்படை (SLN) ஊடகங்க தகவல்கலுக்கமைய, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம், கடற்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) அவசரநிலை குறித்து அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தென் கடற்பரப்பில் கடமையில் ஈடுபட்டிருந்த SLNS விஜயபாகு கப்பலுக்கு கடற்படை தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டது.

திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இந்த வார தொடக்கத்தில் (மே 23) மீன்பிடிப்பதற்காகப் புறப்பட்ட 'கிரெவின் பபா 01' (பதிவு எண். IMUL-A-0921 CHW) என்ற மீன்பிடி இழுவைப்படகில் இம்மீனவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நோய்வாய்ப்பட்ட மீனவர் காலி கடற்கரையிலிருந்து சுமார் 460 கடல் மைல் (சுமார் 851 கிலோமீற்றர்) தொலைவில் உள்ள கடலில் வைத்து கடற்படைக் கப்பலுக்கு மாற்றப்பட்டு, பாதுகாப்பாக காலி துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.