--> -->

இராணுவத்தினரால் நெற்பயிர் சாகுபடி செய்யும் பகுதிகளில் ட்ரோன் தொழில்நுட்ப முறை பயன்படுத்தல்

ஜூன் 06, 2023

மிக நவீன மற்றும் விஞ்ஞான நடைமுறைகளை கடைப்பிடித்து, இலங்கை இராணுவம் முதன்முறையாக வெள்ளிக்கிழமை (ஜூன் 02) காலை ஜயவர்தனபுர இலங்கை இராணுவ தலைமையக வளாகத்தை சுற்றியுள்ள 8.5 ஏக்கர் பரப்பளவில் இராணுவ நெற் பயிர்ச்செய்கைகளுக்கு கிருமி நாசிகள் மற்றும் களை நாசிகளை தெளிப்பதற்கு சோதனை அடிப்படையில் ஆளில்லா விமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகமும், விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எஸ்.எம் அபேசேகர ஆகியோரின் கருத்தின் அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், செலவைக் குறைக்கவும், அத்தகைய நடைமுறைகளின் தாக்கத்தை அதிகரிக்கவும் முயற்சிக்கவும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஏகே ராஜபக்ஷ ஆர்எஸ்பீ, 2 வது (தொ) இலங்கை விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் கெப்டன் டபிள்யூ.ஏ.ஏ.கே.வை விக்ரமசிங்க ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் ஸ்ரீ பொலா வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம், ஏரோகினி வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி, ஏரோகினி வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் 3 பிரதிநிதிகள் தங்களது ட்ரோன்கள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இலங்கை விவசாயம் மற்றும் கால்நடை படையணியினால் நிர்வகிக்கப்படும் நெல் வயல் பகுதியில் படையினர்களின் முன்னிலையில் கிருமி நாசிகள் மற்றும் களை நாசிகளை தெளிக்கும் நுட்பங்களை செய்து காட்டினர்.