--> -->

4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி சிப்பாய்களினால்
அனர்த்த முகாமைத்துவ பணி

ஒக்டோபர் 19, 2023

4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி சிப்பாய்கள் ஞாயிற்றுக்கிழமை (15 ஒக்டோபர்) மாத்தளை, தலகிரியாகம கிராம சேவை பிரிவில் 'ரஜமஹா' குளத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பை தடுப்பதற்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்தனர்.

கலேவெல அனார்த்த முகாமைத்துவத்தின் படையினருக்கு கிடைத் தகவலுக்கமைய அவ்விடத்திற்கு விரைந்து சென்று 500 மணல் மூட்டைகளை அடுக்கி பாரிய கசிவினை தடுத்துள்ளனர். நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர்களின் தீவிரக் கண்காணிப்பின் கீழ் இரு அதிகாரிகள் மற்றும் 24 சிப்பாய்கள் இப்பணியை மேற்கொண்டதால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.

கௌரவ. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் அவர்கள் அந்த இடத்தை பார்வையிட்டதுடன், இராணுவத்தின் அயராத முயற்சிகளையும் அவர்களின் பங்களிப்பையும் பாராட்டினார். மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி, 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 111 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர் திட்டத்திற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர். 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி இப்பணியை உன்னிப்பாக கண்காணித்தார்.

நன்றி - www.army.lk