--> -->

இலங்கையின் இளம் வீரர்களை கௌரவிக்கும் வகையில் 'தேசிய இளைஞர் வீரர்கள் விருது'தேசிய மாணவர் படையணியின் ஊடாக வழங்கப்படவுள்ளது
– பதில் பாதுகாப்பு அமைச்சர்

டிசம்பர் 02, 2023

இலங்கையின் வளர்ந்து வரும் இளம் வீரர்களை கௌரவிக்கும் வகையில் தேசிய மாணவர் படையணியின் (NCC) மூலம் 'தேசிய இளைஞர் வீரர்கள் விருது' அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

எதிர்கால சமுதாயத்தில் மிகுந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அதிகூடிய திறன்களுடனான தலைமைப் பண்புகளைக் கொண்ட ஆற்றல்மிக்க, பல்துறை மற்றும் ஒழுக்கமான குடிமக்களாக இளைஞர்களை உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ரண்டம்பேயிலுள்ள தேசிய மாணவர் பயிற்சி நிலையத்தில் நேற்று (டிசம்பர் 01) நடைபெற்ற தேசிய மாணவர் படையணியின் 41வது தகுதிகாண் அதிகாரிகளின் சின்னம் அணிவிக்கும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 2022 இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 10 பெண் உத்தியோகத்தர்கள் உட்பட 64 தகுதிகான் உத்தியோகத்தர்கள் தங்களது பயிற்சியை நிறைவு செய்ததன் பின்னர், இன்று இரண்டாம் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டனர்.

142 ஆண்டுகால தேசிய மாணவர் படையணியின் வரலாற்றில் முதன்முறையாக இம்முறை, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் அடையாள ரீதியாக ஆயுதப்படை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஆணையிடும் வாள்கள் தேசிய மாணவர் படையின் தகுதிகான் அதிகாரிகளுக்கும் பிரதம அதிதியால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் திஸாநாயக்க, இலங்கை விமானப்படையின் பிரதிப் பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் வருண குணவர்தன, தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுதந்த பொன்சேகா, தேசிய மாணவர் படையணியின் பயிற்சி நிலைய கட்டளைத் தளபதி கேர்ணல் ஆர்.எம். பிரேமதிலக்க, முப்படை அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.