--> -->

நாட்டின் இளைஞர்களை இணையத் தீவிரமயமாக்களிலிருந்து பாதுகாக்க ஒன்றுபட்ட முயற்சி தேவை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன்

டிசம்பர் 08, 2023

தெற்காசிய பிராந்தியத்தில் இளைஞர்களின் இணையத்தள தீவிரமயமாக்கல் என்பது ஒரு சிக்கலான சவாலாக மாறியுள்ளது. முறையான கல்வி, ஒத்துழைப்பு, சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் மேம்படுத்துவதன் மூலம், தீவிரவாத சிந்தனைகளை எதிர்க்க நமது இளைஞர்களை வலுப்படுத்த முடிவதுடன் பிராந்தியத்தில் அமைதியும் இணக்கப்பாடும் நிலவ வழிகோலும்.

 “Search for Common Ground with Meta (Facebook), Skype, Twitter மற்றும் Messenger” ஆகிய நிறுவனங்களால் நேற்று (டிசம்பர் 07) கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்களை தீவிரமயமாக்களில் இருந்து மீட்டல் தொடர்பான செயலமர்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இது பெரும்பாலும் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அரசியல் ஸ்திரமின்மை, ஓரங்கட்டப்படுதல் மற்றும் கல்வி அல்லது வாய்ப்புகள் இல்லாமையினால் ஏற்படுகின்றது. தீவிரமயமாக்கலை நிவர்த்தி செய்வதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது என தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் தற்போது உலகளாவிய ரீதியில் பெரும் செல்வாக்கை செலுத்துகின்றன.

தற்போது இணையத் தளங்கள் கருத்துச் சுதந்திரத்திற்கும் சமூகப் பாதுகாப்பிற்கும் இடையே ஒரு சிறிய இடைவெளியே காணப்படுகிறது என்றும், இது தொடர்பில் பாதுகாப்பு உத்திகள் மற்றும் வழிமுறைகளை சரியான முறையில் பயன்படுத்துவதில் தகவல் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தொழில்நுட்ப தொழில்துறை மற்றும் சிவில் சமூகம் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.