--> -->

இராஜாங்க அமைச்சர் தென்னகோன் ஐக்கிய இராச்சிய கடற்படை
கப்பலான ‘HMS க்கு விஜயம்

ஜனவரி 30, 2024

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், நேற்று (ஜன. 29) மாலை ஐக்கிய இராச்சிய கடற்படை கப்பலான ‘HMS க்கு விஜயம் செய்தார். இக்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 28) இலங்கை வந்தடைந்தது.

கப்பலுக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சரை கப்பலின் கட்டளை அதிகாரி கொமாண்டர் போல் கெட்டி வரவேற்றார். இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் அவர்களும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் தென்னகோன், இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை நினைவு கூர்ந்தார். தேவைப்படும் காலங்களில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவையும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான அதன் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

மேலும், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த அதன் ஒத்துழைப்பு, கூட்டுப் பயிற்சிகள் மற்றும் தகவல் பகிர்வு ஆகியவற்றுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை இராஜாங்க அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்நிகழ்வின் இத்தாலி குடியரசின் தூதர் டேமியனோ பிரான்கோவிக், மாலத்தீவு உயர்ஸ்தானிகர் பாத்திமா ஜினா, பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் (பதில்) வாஜித் ஹசன் ஹஷ்மி, பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிபுல் இஸ்லாம், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு கார்மென் மோரேனோ, ஜெர்மன் தூதர் பெலிக்ஸ் நியூமன், நியூசிலாந்தின் உயர் ஆணையர் (பதில்) பேட்ரிக் ராடா, ஆஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் ஊடகப் பணிப்பாளரும், பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும், தேசிய பாதுகாப்புக் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகமும் (வேலைபார்க்கும்), கேர்ணல் நளின் ஹேரத் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.