--> -->

சுகாதாரத் துறை வேலைநிறுத்தம் காரணமாக விரைவான
நடவடிக்கைகளில் இராணுவத்தினர்

பெப்ரவரி 01, 2024

பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சுகாதாரத் துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் நாடளாவிய வேலைநிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் இலங்கை இராணுவம் இன்று (பெப்ரவரி 01 ) அரச வைத்தியசாலைகளுக்கு படையினர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை தடையின்றி வழங்குவது ஆகும்.

அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை, தேசிய கண் வைத்தியசாலை, பல் வைத்தியசாலை கொழும்பு, ஹோமாகம ஆதார வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, மீரிகம ஆதார வைத்தியசாலை, மாவட்ட பொது வைத்தியசாலை அவிசாவளை, குருநாகல் போதனா வைத்தியசாலை, மாரவில ஆதார வைத்தியசாலை, தங்கொட்டுவ ஆதார வைத்தியசாலை, அங்கொட வைத்தியசாலை, அங்கொட ஐடிஎச் வைத்தியசாலை, அங்கொட கிழக்கு வைத்தியசாலை, அதுருகிரிய ஆதார வைத்தியசாலை, நவகமுவ ஆதார வைத்தியசாலை, நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை, பண்டாரகம ஆதார வைத்தியசாலை, பலாங்கொட ஆதார வைத்தியசாலை, ஹேலியகொட ஆதார வைத்தியசாலை, கேகாலை போதனா வைத்தியசாலை, மாத்தறை போதனா வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, உடுகம ஆதார வைத்தியசாலை, மொனராகலை பொது வைத்தியசாலை., ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை, தெபரவெவ ஆதார வைத்தியசாலை மற்றும் தெஹியத்தகண்டிய ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் வைத்தியசாலை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் படையினர் பணியமர்த்தப்படுள்ளனர்.

அந்தந்தப் பாதுகாப்புப் படைத் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ், பல்வேறு வைத்தியசாலைகளில் இராணுவத்தினர் சுகாதாரச் சேவைகள் இடையூறுகள் இல்லாமல் தொடர்வதை உறுதிபடுத்தும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவசர கால நடவடிக்கைகளில் மேலதிக படையினரை அனுப்புவதற்கு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

நன்றி - www.army.lk