MINUSCA பணியிலுள்ள இலங்கை விமானப்படை
 குழுவின் கட்டளை மாற்றம்                        
                        
                          டிசம்பர் 17, 2024                            
                        
                    மத்திய ஆபிரிக்க குடியரசில் (MINUSCA) ஐக்கிய நாடுகளின் பல பரிமாண ஒருங்கிணைந்த உறுதிப்படுத்தல் படை பணியிலுள்ள இலங்கை விமானப்படையின் 10வது விமானப்படை குழு டிசம்பர் மாதம் (06) கடமைக்காக அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 14 ஆம் திகதி மத்திய ஆபிரிக்க குடியரசின் பிரியாவில் உள்ள இலங்கை விமானப் பிரிவில் கட்டளை அதிகாரிகளின் மாற்றம் இடம்பெற்றதாக இலங்கை விமானப்படை ஊடகங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய 10ஆவது விமானப்படை குழு கட்டளை தளபதி குரூப் கப்டன் DUE De சில்வா, 9ஆவது படைத் தளபதி குரூப் கேப்டன் RMAU ரத்நாயக்கவிடம் இருந்து கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
MINUSCAவிற்கு அனுப்பப்பட்டுள்ள இலங்கை விமானப் படை பிரிவு, நாட்டின் மிகப்பெரிய பிரதேசமான கிழக்கு பிராந்தியத்தில் விமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ளதோடு, துருப்புப் போக்குவரத்து, தேடல் மற்றும் மீட்பு பணிகள், CASEVAC/MEDEVAC பணிகள், ISR பணி, விமான ரோந்து, கண்காணிப்பு பணிகள் மற்றும் வான்வழி தாக்குதல் ஆதரவு உட்பட பல செயல்பாட்டுக் கடமைகளை மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.