--> -->

ஆயுதம் ஏந்த எவருக்கும் அனுமதியில்லை – பாதுகாப்புச் செயலாளர்

ஜனவரி 01, 2021
  •    பிரிவினைவாதத்திற்கும் தீவிரவாதத்துக்கும் இடமில்லை
  •    வெளிநாட்டில் இருந்து போதைபொருள் வலையமைப்பை கையாள இடமளிக்கப்போவதில்லை

பிரிவினைவாதத்திற்கோ தீவிரவாதத்திற்கோ ஒருபோதும் இடமில்லை என்றும் அடுத்த ஆண்டு முதல் இது போன்ற முயற்சிகளை தடுக்க மேலும்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக   பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று (31, 2020) தெரிவித்தார்.

தெஹிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளரிடம் ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட  கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர், சமூகத்தில் பரப்பப்படும் அண்மைய தகவல்களை மேற்கோள் காட்டி "எவரும் ஆயுதம்  ஏந்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என மேலும் தெரிவித்தார்.

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் வலையயமைப்புடன் தொடர்புடைய போதைப்பொருள் தடுப்புக் கைதிகள் சிறைச்சாலைகளில் தற்பொழுது ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை மற்றும் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ்  பரவும் அபாயம் என்பன  காரணமாக விடுவிக்கப்படமாட்டார்கள் என ஜெனரல் குணரத்ன சுட்டிக்காட்டினார்.

"வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருள் வலையமைப்பை கையாளுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை” என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், "பாரிய அளவிலான போதைப்பொருள் வலையமைப்பு செயற்படும்  நாடுகளுடன் நாங்கள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம், மேலும் அத்தகைய நாடுகளில்  உள்ள இலங்கையின் பிரபள குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டுவரும் நோக்கில்  அவர்கள் தொடர்பாக  சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் மூலம்  18 சிவப்பு அறிவுறுத்தல்கள்  வழங்கியுள்ளோம்" எனவும் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் விளக்கமளித்திருந்தார்.

பாதாள உலக நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து நாம் வாரந்தோறும் கலந்துரையாடல்களை நடத்துகிறோம் எனவும் நாட்டில் சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு (2021) மேலும் பலப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், புத்தாண்டின் முதற் காலாண்டின் போது மீண்டும் எழுப்பப்படக் கூடும் எனக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பதிலளித்த அவர், "இந்த குற்றச்சாட்டுக்கள் 2009 ஆம் ஆண்டிலிருந்து எமது இராணுவத்திற்கு எதிராக தொடர்ந்தேச்சையாக சுமத்தப்பட்டு வருகின்றன" எனவும் " நாம்  முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கையின்போது அத்தகைய போர்க்குற்றங்கள் எதுவும் இழைக்கப்படவில்லை" எனவும்  அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.