மாலத்தீவு தூதகரத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை
பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்                        
                        
                          பெப்ரவரி 04, 2025                            
                        
                    இலங்கையிலுள்ள மாலத்தீவு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ஹசன் அமீர், இன்று (பிப்ரவரி 03) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்து சமுத்திர பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இலங்கைக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார். இராணுவ பரிமாற்றங்கள், கூட்டு பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டு முயற்சிகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
இரு நாடுகளுக்கிடையிலான உறுதியான இருதரப்பு உறவுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த கேர்ணல் ஹசன் அமீர் இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான மாலத்தீவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் முடிவில் நினைவுப் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.