பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் இரங்கல் செலுத்தினார்

ஏப்ரல் 25, 2025

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இன்று காலை (ஏப்ரல் 25) வத்திகான் தூதரகத்திற்கு விஜயம் செய்து பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

இலங்கைக்கான வத்திகான் தூதுவர் அதிமேதகு பேராயர் Brian N. Uthaigwe அவரை வரவேற்றார்.

பேராயர் Uthaigwe உடனான சந்திப்பின் போது, பிரதி அமைச்சர் தனது அனுதாபங்களை தெரிவித்து, இரங்கல் புத்தகத்தில் குறிப்புகளை பதிவிட்டார்.

இதன்போது மறைந்த பாப்பரசரின் ஆன்மீகத் தலைமைத்துவத்தையும் உலகளாவிய கிறிஸ்தவ சமூகத்திற்கு அவரது சேவையையும் அவர் நினைவுபடுத்தினார்.