யாழ்ப்பாணத்தில் 40.70 ஏக்கர் நிலம் இலங்கை இராணுவத்தினால்
பொதுமக்களிடம் கையளிப்பு

மே 08, 2025

மூன்று தனித்தனி காணிகளாக மொத்தம் 40.70 ஏக்கர் நிலம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் காணி விடுவிப்பு திட்டத்தின் கீழ் 2025 மே 01 அன்று உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

இராணுவ ஊடக தகவல்களுக்கமைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் வழிகாட்டுதலின் கீழ், தகுந்த மதிப்பீடுகளுக்குப் பின் இந்த காணி விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் M. பிரதீபன் மற்றும் யாழ்ப்பாணப் பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் Y.A.B.M. யஹம்பத் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நில உரிமையாளர்களின் நீண்டகால வேண்டுகோல்களுக்கினங்க உத்தியோகபூர்வ நடைமுறைகளின்படி முழு வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுடன் இந்த நில விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டது என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.