NACWCயின் ஏட்பாட்டில் பாதுகாப்பு அமைச்சில் வீட்டுப் பாவனை இரசாயன பொருள்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது
ஜூன் 14, 2025இரசாயன ஆயுத மாநாட்டை செயல்படுத்துவதற்கான தேசிய ஆணையம் (NACWC), வியாழக்கிழமை (ஜூன் 12) பாதுகாப்பு அமைச்சின் நந்திமித்ர மண்டபத்தில் வீட்டுப்பாவனை இரசாயனங்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பாக கையாள்வது குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
அமைச்சின் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தி எண்பது பணியாளர்கள் இந்த அமர்வில் பங்கேற்றதுடன், இது குறிப்பாக உள்நாட்டு மற்றும் நிறுவன அமைப்புகளில் இரசாயன பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்துவதையும், இரசாயன பாதுகாப்பில் சிறந்த நடைமுறைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சி இரண்டு அங்கங்களாக நடத்தப்பட்டதுடன் முதலில் வீட்டுப்பாவனை இரசாயனங்களின் பாதுகாப்பான பயன்பாடு தொடர்பில் பங்கேற்பாளர்களுக்கு துப்புரவு செய்ய பயன்படுத்தப்படும் பொருள் மற்றும் கிருமிநாசினிகள் போன்ற பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து விளக்கப்பட்டது. சரியான விளம்பரம், சேமிப்பு, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் முன்னெச்சரிக்கைகள் ஆகியவை தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
இரண்டாவது பகுதி அமைச்சு வளாகத்திற்குள் இரசாயன பாதுகாப்பு தொடர்பில், குறிப்பாக உயர் பாதுகாப்பு சூழல்களில், இரசாயனங்களின் தவறான பயன்பாட்டைத் தடுத்தல் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது அளிக்கப்பட்டது. நிலையான இயக்க நடைமுறைகளை (SOPs) செயல்படுத்துதல், இரசாயன பொருற்களை பராமரித்தல் மற்றும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்து விழிப்புடன் இருப்பது குறித்து பங்கேற்பாளர்களுக்கு அறிவூட்டப்பட்டது.
இந்நிகழ்வில் பங்கெடுப்பாளர்களுக்கு கேள்வி-பதில் சந்தர்ப்பமும் அளிக்கப்பட்டது. அத்துடன் பங்கேற்பாளர்கள் NACWC நிபுணர்களுடன் ஆபத்து தொடர்பு, சம்பவ பதில் மற்றும் இரசாயன பாதுகாப்புக்கான கொள்கை நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துப்பரிமாறவும் வழியமைத்து கொடுத்தது.
இந்நிகழ்வு, இரசாயன பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், இரசாயன ஆயுத மாநாட்டின் கீழ் இலங்கையின் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் NACWC இன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இரசாயன பாதுகாப்பு தொடர்பில் சிறந்த பழக்கவழக்கங்களை வளர்ப்பதற்காக இது போன்ற பயிற்சி திட்டங்கள் பிற அரசு துறைகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.