கொழும்பில் பிரெஞ்சு பாஸ்டில் தின கொண்டாட்டங்கள்
ஜூலை 15, 2025உலகளவில் Fête nationale அல்லது பாஸ்டில் தினம் என்று அழைக்கப்படும் பிரெஞ்சு தேசிய தினம் நேற்று (ஜூலை 14) கொழும்பில் உள்ள Galle Face Hotel நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளை கலந்துக்கொண்ட இந்நிகழ்விவு இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நீடித்த உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்தது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரம் இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கலந்துக்கொண்டனர். வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கைக்கான பிரெஞ்சு தூதுவர் அதிமேதகு Jean-François Pactet, விருந்தினர்களை அன்புடன் வரவேற்றார்.
இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையில் தொடர்ந்து வரும் சிறப்பான இராஜதந்திர உறவை எடுத்துக்காட்டும் வகையில், பிரமுகர்கள், இராஜதந்திரிகள் மற்றும் விருந்தினர்களின் பங்கெடுப்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.