யுத்த வீரர் விவகாரங்கள் குறித்த உயர்மட்ட விளக்கக் கூட்டத்தில் நலன்புரி தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்

ஜூலை 18, 2025

யுத்த வீரர்கள் விவகாரகள் குறித்த குழுவின் முன்னேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைச்சரவை சமர்ப்பிப்புகள் குறித்த உயர்மட்ட விளக்கக் கூட்டம் இன்று (ஜூலை 18) காலை கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது, இது யுத்த வீரர்கள் மற்றும் மறைந்த யுத்த வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
 
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

யுத்த வீரர்கள் நலன் தொடர்பில் எடுக்கப்படும் முடிவுகள் அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதன் முக்கியத்துவத்தை பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். நலன்புரி முயற்சிகளை ஒழுங்குபடுத்துதல், அமைச்சரவை ஒப்புதல்களை விரைவுபடுத்துதல் மற்றும் போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தேவைகள் தேசியக் கொள்கைகலீல் முக்கியத்துவமிக்கதாக இருப்பதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதியை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இது தொடர்பில் யுத்த வீரர்களுக்கு பயனளிக்கக்கூடிய முடிவுகளை எடுக்க முன்னாள் இராணுவ அதிகாரியான பிரதி அமைச்சர் முக்கிய பங்கை வகிக்கிறார்.

இந்த விளக்கக் கூட்டத்தின் போது, குழுவின் செயல்பாட்டு மைல்கற்கள் பற்றிய மதிப்பாய்வு, முன்மொழியப்பட்ட கொள்கை கட்டமைப்புகள் குறித்த விவாதங்கள் மற்றும் யுத்த வீரர்கள் விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவை ஆவணங்களின் தற்போதைய நிலையை மதிப்பீடு செய்தல் ஆகியவை அடங்கும். நிறுவன ஆதரவு கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் நடந்துகொண்டிருக்கும் நலத்திட்டங்களை பரந்த நிர்வாக நோக்கங்களுடன் சீரமைப்பது ஆகியவை இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.

தேசிய பாதுகாப்பு, சேவைப் பணியாளர்கள் நலன் மற்றும் மூலோபாயக் கொள்கை செயல்படுத்தலுக்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை இந்த கலந்துரையாடல்கள் மேலும் வலுப்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.