பாகிஸ்தான் இராணுவ தலைமை பணியாளர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

ஜூலை 22, 2025

பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமைத் பணியாளர் ஜெனரல் சையத் ஆமர் ரசா, இன்று (ஜூலை 22) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர (ஓய்வு) அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின் போது இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முகமது பாரூக் சமூகமளித்திருந்தார்.

வருகை தந்த பாகிஸ்தானிய தூதுக்குழுவை பிரதி அமைச்சர் அன்புடன் வரவேற்று இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டார். பாதுகாப்பு தொடர்பான முயற்சிகளில் இளைஞர்களின் ஈடுபாடு, கூட்டு இராணுவ பயிற்சிகள், திறன் மேம்பாடு மற்றும் பரிமாற்றம், குறிப்பாக இயற்கை அனர்த்தங்கலாய் முகங்கொடுக்க தயார்நிலை மற்றும் மீள்தன்மையை வலுப்படுத்துதல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. 

இரு தரப்பினரும் உயர் மட்ட பரிமாற்றங்களைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை ஏற்று இருதரப்பு ஈடுபாடுகளில் உத்வேகத்தைத் தக்கவைக்க பரஸ்பரம் வசதியான நேரங்களில் திட்டமிடப்பட்ட கலந்துரையாடல்களை மேட்கொள்வதன் முக்கியத்துவத்தை பகிர்ந்துக்கொண்டனர். தொழில்முறை மேம்பாடு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய இலங்கை பாதுகாப்புப் பணியாளர்களுக்கு பாகிஸ்தான் நீண்டகாலமாக வழங்கி வரும் பயிற்சி வாய்ப்புகளுக்கு பிரதி அமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதி அமைச்சர், கடந்த ஏப்ரல் மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இலங்கை-பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு கலந்துரையாடலை நினைவு கூர்ந்து பல்வேறு பாதுகாப்பு களங்களில் கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதில் அதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையே பரஸ்பர புரிதல் மற்றும் மூலோபாய கூட்டாண்மையை வளர்ப்பதில் இந்த சந்திப்பு மற்றொரு படியை குறிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.