ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
ஆகஸ்ட் 13, 2025இலங்கைககான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அதிமேதகு காலித் நாசர் சுலைமான் அல்அமெரி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 13) இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா மற்றும் தூதுவர் அல்அமெரி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சுமூகமான கலந்துரையாடலின் போது,
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை இரு தரப்பினரும் ஆராய்ந்தனர், குறிப்பாக பாதுகாப்பு உற்பத்தி, சைபர் பாதுகாப்பு, தகவல் பகிர்வு மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது பணிபுரிந்துவரும் இலங்கையர்களினால் வழங்கப்படும் பாரிய மனித வளத்தின் பங்களிப்புகள் தூதுவரால் பாராட்டப்பட்டதுடன், தனது நாட்டின் வளர்ச்சியில் இலங்கையர்களின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது எனவும் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயத்தை மேற்கொள்ளும் தூதுவருக்கு பாதுகாப்பு செயலாளர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில், பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் கசுன் அதிகாரியும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.