புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
ஆகஸ்ட் 25, 2025புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஆகஸ்ட் 25) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இலங்கையின் 37வது பொலிஸ் மா அதிபராகப் பொறுப்பேற்ற வீரசூரியவை பாதுகாப்பு செயலாளர் அன்புடன் வரவேற்றார்.
இந்த சந்திப்பின் போது, இரு அதிகாரிகளும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு குறித்து கவனம் செலுத்தினர்.
புதிய பொலிஸ் மா அதிபரின் நியமனத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் வாழ்த்து தெரிவித்ததோடு, பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இலங்கை பொலிஸாருக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதில் நம்பிக்கை தெரிவித்தார்.
நாடு முழுவதும் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ளவும், பாதுகாப்பை நிலைநிறுதத்தல், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையே தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்தச் சந்திப்பு சுட்டிக்காட்டினார்.