மியன்மார் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
செப்டம்பர் 25, 2025மியன்மார் குடியரச தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Brigadier General Zaw Moe Lwin, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (செப்டம்பர் 25) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
அன்பான வரவேட்பை தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் Brigadier General Lwin உடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர உறவுகள், குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பில் கலந்துயாடப்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மியன்மாரை தாக்கிய பூகம்பத்தின் போது இலங்கை அளித்த மனிதாபிமான உதவிக்கு Brigadier General Lwin, நன்றி தெரிவித்தார், இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பின் அடையாளமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.