பாதுகாப்பு பிரதி அமைச்சர் சிரேஷ்ட இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கு
உரை நிகழ்த்தினார்
ஒக்டோபர் 01, 2025
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இன்று (அக்டோபர் 01) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள விமானப்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகைதந்த பிரதி அமைச்சரை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க வரவேற்றார். பிரதி அமைச்சருக்கு ஒரு சம்பிரதாய வரவேற்பும் இங்கு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் விமானப்படைத் தளபதியுடன் கலந்துரையாடியதுடன் விமானப்படை நிர்வாகக் குழுவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார், இதன் போது விமானப்படையின் முக்கிய செயல்பாட்டு மற்றும் நிர்வாக விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் ஜயசேகர, தேசிய அபிவிருத்தி திட்டங்களில் விமானப்படையின் முக்கிய பங்கையும், அனர்த்த முகாமைத்துவ பணிகளின் போது அவர்களின் பங்களிப்பையும் பாராட்டினார். பொறுப்புக்கூறல் மற்றும் தீவிர விழிப்புணர்வைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் நோக்கத்தை வலியுறுத்தி, சிரேஷ்ட அதிகாரிகள் நாட்டின் வளர்ச்சிக்கு தங்கள் முழு திறனையும் அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தேசிய திட்டங்களில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் நெருக்கமான ஈடுபாடு மற்றும் மேற்பார்வையின் அவசியத்தையும் அவற்றில் தொழில்முறை மற்றும் ஒழுக்கத்தின் மிக உயர்ந்த தரத்தை கடைபிடிப்பதை வலியுறுத்தியதுடன் . தேசிய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு தொடர்பான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான அணுகுமுறையில் அவர்களின் கட்டளை பொறுப்பு மற்றும் பல்துறைத்திறனைக் கையாள அவர் வலியுறுத்தினார்.
அமைதி மற்றும் தேசிய வளர்ச்சி முயற்சிகளுக்கு விமானப்படையின் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.