தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் பதவியிலிருந்து மேஜர்
ஜெனரல் ருவன் வணிகசூரிய ஓய்வு பெறுகிறார்

ஒக்டோபர் 27, 2025

தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக சேவையாற்றிய (CNI) மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய இன்று (அக்டோபர் 27) தனது 60வது வயது பூர்த்தியானதையிட்டு அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் வணிகசூரிய, தான் பணியாற்றிய காலம் முழுவதும் தாய் நாட்டிற்காக சிறப்பாக சேவையாற்றியுள்ளார். 

தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக செயற்பட்ட இவர் நாட்டின் புலனாய்வு வலையமைப்பை வலுப்படுத்துவதிலும், தேசிய பாதுகாப்பு விடயங்களில் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதிலும் அவர் மிக முக்கிய பங்கு வகித்தார்.

மேஜர் ஜெனரல் வணிகசூரிய, இந்த ஆண்டு ஜனவரி மாதம் இப்பதவியை பொறுப் பேற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மேஜர் ஜெனரல் வணிகசூரிய தனது பதவிக் காலத்தில் தேசிய பாதுகாப்பிற்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பு மிக்க சேவை மற்றும் பங்களிப்பிற்கு பாதுகாப்பு அமைச்சு அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.