யுத்த வீரர்களின் நலனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்: ரணவிரு நலன் அமைச்சரவைப் பத்திரம் குறித்த கலந்துரையாடல்

நவம்பர் 12, 2025

ரணவிரு நலன் அமைச்சரவைப் பத்திரம் குறித்த உயர்மட்டக் கூட்டம் நேற்று (நவம்பர் 11) பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் Dr ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பயங்கரவாத நடவடிக்கைகளால் காயமடைந்த யுத்தவீரர்களுக்கு அவர்களின் சேவை மற்றும் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் சம்பள உரிமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து இந்த கலந்துரையாடலின் போது முதன்மையாக கவனம் செலுத்தபட்டது.

பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய மருத்துவக் காரணங்களுக்காக 55 வயதிற்குப் பிறகு ஓய்வு பெற்ற யுத்தவீரர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் பெற்றுக் கொடுத்தல் உட்பட ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மருத்துவ இராணுவ சபையொன்றின் முன் மீண்டும் தோன்ற வாய்ப்புகளை வழங்குதல், என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

முக்கியமாக, இந்த நலத்திட்டங்களை செயல்படுத்த தேவையான முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளை எடுப்பதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் செயல்பாடு குறித்தும் கவனம் செலுத்தபட்டது. பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இந்த செயல்முறையை உடனடியாக முடிக்க வேண்டியதன் அவசியத்தை நிதி அமைச்சின் செயலாளர் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தில் தொடர்புடைய நிறுவன தலைவர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.