தேசிய அனர்த்த முகாமைத்துவ முயற்சிகளை வலுப்படுத்த 3.25 மில்லியன் ரூபாயை
நன்கொடையாக வழங்கிய தேர்ஸ்டன் கல்லூரி

டிசம்பர் 03, 2025

தேசிய அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு ஒத்துழைக்கும் வகையில், ரூபா 3,250,000.00 நிதிப் பங்களிப்பு இன்று பாதுகாப்பு அமைச்சில் வைத்து பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்த (ஓய்வு) அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த நன்கொடையை தேர்ஸ்டன் கல்லூரி நம்பிக்கை நிதியத்தின் (Thurstan College Trust Fund) தலைவர் திரு. நோயல் ஜோசப் அவர்கள் வழங்கினார்.

இந்த மொத்த பங்களிப்பில் நம்பிக்கை நிதியத்திலிருந்து ரூ. 2,250,000.00 மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள தேர்ஸ்டன் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரிடம் இருந்து ரூ. 1,000,000.00 என்பன உள்ளடங்குகின்றன. இது தேசிய நலன் மற்றும் அனர்த்த நிவாரண முயற்சிகளுக்கான தேர்ஸ்டன் சமூகத்தின் வலுவான கூட்டு ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது.

பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்த (ஓய்வு) அவர்கள், நாட்டின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணத் திறன்களை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட சரியான நேரத்திலான மற்றும் அர்த்தமுள்ள ஆதரவுக்கு தனது பாராட்டைத் தெரிவித்தார். அத்துடன், நன்கொடையாளர்களின் தாராள மனப்பான்மை மற்றும் தேசிய உணர்வையும் பாராட்டினார்.