குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி
இறுதி அஞ்சலி செலுத்தினார்
டிசம்பர் 04, 2025
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருந்தபோது வென்னப்புவ, லுனுவில பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ள ரத்மலானை, இல்லத்திற்கு இன்று (04) முற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அவரது மனைவி, பெற்றோர், சகோதர சகோதரிகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நன்றி - President's Media Division