இலங்கை கடற்படை அக்குரேகொடவில் உள்ள அதன் புதிய நவீன தலைமையக வளாகத்திற்கு மாரியது
டிசம்பர் 09, 2025இலங்கை கடற்படை அதன் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் அக்குரேகொடவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் (DHQC) அதன் புதிய தலைமையகத்திற்கு இன்று (09 டிசம்பர்) அதிகாரப்பூர்வமாக மாறியது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துக் கொண்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட வரவேற்றத்துடன், அவருக்கு கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை அணிவகுப்பு ஒன்றும் அளிக்கப்பட்டது.
பாதுகாப்புத்துறை நவீனமயமாக்கலில் ஒரு முக்கிய படியாக இப் புதிய தலைமையக வளாகத்தை பிரதி அமைச்சர் பாராட்டினார். மேலும் கடற்படையினரின் தைரியம் மற்றும் தொழில்முறைத்தன்மையை, குறிப்பாக தித்வா சூறாவளி மற்றும் கலாஓயா அனர்த்த மீட்புப் பணிகளின் போது கடற்படையினரின் சேவையை பாராட்டினார். அதன்போது உயிர் தியாகம் செய்த பணியாளர்களுக்கும் மற்றும் காணாமல் போனவர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார்.
கடற்படை தலைமையகத்தில் உள்ள அதிநவீன வசதிகள், அதன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதோடு, ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துகிறது. இது கடற்படையின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியை பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்படை அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இராணுவ மற்றும் விமானப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் விசேட அதிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.