தேசிய நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க Blue Skies Aviation Solutions (Pvt) Ltd
விமான மசகு எண்ணெய்யை அன்பளிப்பு செய்தது

டிசம்பர் 10, 2025

இலங்கையின் முன்னணி விமான சேவை வழங்குநர்களில் ஒன்றான Blue Skies Aviation Solutions (Pvt) Ltd, இலங்கை விமானப்படைக்கு ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள விமான மசகு எண்ணையை தேசிய நிவாரண நடவடிக்கைகளுக்காக அன்பளிப்பு செய்துள்ளது.

இந்த அன்பளிப்பு இன்று (டிசம்பர் 10) அந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விங் கமாண்டர் தொன் அசித்த மானகேவினால் (ஓய்வு), பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அன்பளிப்பு செய்யப்பட்ட இந்த உயர்தர ஏரோஷெல் 500 மசகு எண்ணெய் நிவாரணப் பணிகளில் பயன்படுத்தப்படும் பெல் 412 மற்றும் பெல் 212 ஹெலிகொப்டர்களின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும். விமானப்படையின் விமானங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுவது அத்தியாவசியமாகும். இவை நாடளாவ ரீதியில் நிவாரணப் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.