‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு முப்படைகளின் அனைத்து தரநிலை உத்தியோகஸ்தர்களின் ஒரு நாள் சம்பளம் 372 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு

ஜனவரி 02, 2026

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து தரநிலை உத்தியோகஸ்தர்களும் தங்களது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

அதன்படி, முப்படைகளால் நன்கொடையாக வழங்கப்பட்ட தொகை 372,776,918.28 ரூபாவாகும். 

இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவினால்  250 மில்லியன் ரூபாவும், 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொடவினால் 73,963,879.71 ரூபாவும், 

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்கவினால் 48,813,038.97 ரூபாவும் 

கையளிக்கப்பட்டதோடு இதற்கான காசோலைகள் நேற்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகோந்தாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026. 01. 01

 

நன்றி - ஜனாதிபதி ஊடகப் பிரிவு