இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ தேசிய திட்டத்திற்கு இணங்க அனர்த்தத்திற்குப் பிந்திய தேவைகள் மதிப்பீட்டிற்கான வழிகாட்டுதல் குழு கூடியது
ஜனவரி 16, 2026‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பத்தை ஒருங்கிணைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ எனும் தேசிய திட்டத்தை அரசாங்கம் ஜனவரி 13 ஆம் திகதி, பண்டாரநாயக்க ஞாவகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH), அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த தேசிய திட்டம் பல முனைகள் கொண்ட உத்தியின் மூலம் நிதியளிக்கப்பட உள்ளது. அதில் தற்போதுள்ள திட்டங்களை மீள் செயல்படுத்துதல், நிதிகளை மூலோபாய ரீதியாக மறுஒதுக்கீடு செய்தல் மற்றும் சர்வதேச நன்கொடையாளர் ஆதரவைத் திரட்டுதல் ஆகியவை அடங்குகின்றன. மீட்பு முயற்சிகளை முன்னெடுக்க 2026 ஆம் ஆண்டிற்காக திட்டமிடப்பட்ட ரூ. 500 பில்லியன் துணை மதிப்பீடு ஒரு முக்கிய நிதியளிப்பு நடவடிக்கையாகும்.
இத்திட்டத்தின் செயல்படுத்தலை திறம்படவும் வெளிப்படையாகவும் மேற்கொள்வதை உறுதி செய்ய, கௌரவ பிரதமர் தலைமையில் 25 உறுப்பினர்கள் கொண்ட ஜனாதிபதி பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு, வீடமைப்பு, வாழ்வாதார மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும் எட்டு அர்ப்பணிக்கப்பட்ட துணைக் குழுக்கள் ஊடாக இந்த பணிக்குழு முழுத் திட்டத்தையும் மேற்பார்வை செய்கிறது.
இந்த தேசிய முயற்சிக்கு இணங்க, முக்கிய துணைக் குழுக்களில் ஒன்றின் தலைவரான பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), கடந்த [Dtup khjk; 14Mk; jpfjp தனது அலுவலகத்தில் அனர்த்தத்திற்குப் பிந்தைய தேவைகள் மதிப்பீட்டிற்கான (PDNA) வழிகாட்டுதல் குழுக் கூட்டத்தை நடத்தினார். தேசிய முன்னுரிமைகளுடன் ஒத்திசைவையும், மூலோபாய வழிகாட்டுதலையும் வழங்கும் பொறுப்பை PDNA வழிகாட்டுதல் குழு வகிக்கிறது.
முக்கிய அரச நிறுவனங்கள் மற்றும் பங்காளர்களை பங்காளர்களை கொண்ட இந்த வழிகாட்டுதல் குழு, PDNA செயல்முறைக்கான மதிப்பீட்டிற்கான வலுவான கட்டமைப்பை உருவாக்குதல், நிர்வாக அமைப்பை நிறுவுதல் மற்றும் பயனுள்ள ஒருங்கிணைப்பு மற்றும் முகாமைத்துவ நடைமுறைகளை உருவாக்குதல் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டது.
மேலும், முக்கிய துறைகளில் ஏற்பட்ட சேதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் மீட்பு தேவைகள் குறித்த துல்லியமான மதிப்பீடுகளை உள்ளடக்கிய விரிவான PDNA அறிக்கையைத் தயாரிப்பதற்கான காலக்கெடுவையும் குழு ஏற்றுக் கொண்டது. அந்த அறிக்கையில் கவனம் செலுத்தப்படும் முக்கிய துறைகள் வருமாறு:
- வீடமைப்பு மற்றும் குடியிருப்புகள் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து
- விவசாயம், சுற்றுலா, தொழில் மற்றும் வணிகம்
- நீர்ப்பாசனம், போக்குவரத்து, நீர் மற்றும் சுகாதாரம், மின்சாரம்
- சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு / வாழ்வாதாரம் மற்றும் அனர்த்த அபாயக் குறைப்பு
- ஆளுமை, பாலினம் மற்றும் சமூக உள்ளடக்கம்
இக்கலந்துரையாடலின் குறிப்பிடத்தக்க பகுதி, PDNA செயல்முறையில் எதிர்கொள்ளப்படும் சவால்களை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தபட்டது. குறிப்பாக அமைச்சுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, போதிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் துல்லியமான தரவுகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர், அபிவிருத்தி பங்காளிகளின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பிற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், தேசிய நோக்கங்களை அடைவதற்கான அரசாங்கத்தின் முழுமையான ஆதரவை உறுதி செய்தார். அதேநேரம், விரைவான மற்றும் மீள்தன்மை கொண்ட மீளமைப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த அணுகுமுறையின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (டமாகி) பணிப்பாளர் நாயகம் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், ஐரோப்பிய ஒன்றியம் (EU), உலக வங்கி (WB), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP), ஆசிய அனர்த்த தயார்நிலை மையம் (ADPC), பல்வேறு ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள் மற்றும் தேசிய திட்டமிடல் துறை (NPD) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.