மனித விற்பனை எதிர்ப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான ஐந்தாண்டு தேசிய செயல் திட்டத்தை இலங்கை வெளியிட்டது
ஜனவரி 28, 2026மனிதர்கள் விற்பனையை கண்காணித்து எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மூலோபாய செயல் திட்டத்தை (2026-2030) மனிதர்கள் விற்பனைக்கு எதிரான தேசிய பணிக்குழு (NAHTTF) ஜனவரி 28, 2026 இன்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது. இது அனைத்து வகையான மனித விற்பனைகளை ஒழிப்பதற்கும் ஒருங்கிணைந்த தேசிய பதிலளிப்புகளை வலுப்படுத்துவதற்கும் இலங்கையின் வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை சட்டமா அதிபர் கௌரவ பாரிந்த ரணசிங்க Jr, PC பாதுகாப்பு செயலாளர் மற்றும் NAHTTF இன் தலைவர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான IOM தலைமைத் அதிகாரி கிறிஸ்டின் பார்கோ ஆகியோர் கலந்து கொண்டனர். 23 முக்கிய அரசு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் NAHTTF உறுப்பினர்கள், இராஜதந்திரிகள், ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் (CLO) பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய உரையாற்றுகையில், “இலங்கையில் மனிதர்கள் விற்பனையிலிருந்து தப்பியவர்களைப் பராமரிப்பதற்கு உடனடி பாதுகாப்பு மற்றும் நீண்டகால மீட்பு ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான, பாலின உணர்திறன் மற்றும் உயிர் பிழைத்தவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. இதில் பாதுகாப்பான தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு மற்றும் உளவியல் ஆதரவு ஆகியவை அடங்கும், மேலும் கடுமையான மற்றும் பாலின வன்முறைகளை அனுபவிக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு குறிப்பாக கவனம் செலுத்துதல், சட்ட உதவி, பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் மீண்டும் கடத்தப்படுவதைத் தடுக்க திறன் மேம்பாடு போன்றவையும் அடங்கும்" என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் மனித விற்பனை எதிர்ப்பு முயற்சிகளின் மூலோபாய வழிகாட்டுதல், ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வைக்கு பொறுப்பான தேசிய பங்குதாரர் பொறிமுறையான NAHTTF இன் தலைமை அமைப்பான பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் இந்த ஐந்தாண்டு செயல் திட்டம் வெளியிடப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் NAHTTF இன் தலைவருமான எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா, “தேசிய மனிதர்கள் விற்பனை எதிர்ப்பு பணிக்குழுவின் பார்வைக்கு மேலதிகமாக, பாதுகாப்பு அமைச்சும் மனித விற்பனையை ஒரு சமூக அல்லது குற்றவியல் பிரச்சினையாக மட்டுமல்லாமல், ஒரு தேசிய பாதுகாப்பு விடயமாகவும் நோக்குகிறது. இது சமூக ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்துவதுடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களையும் தூண்டுகிறது. அத்துடன் இடம்பெயர்வு நிர்வாகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை குறைக்கின்றது. எனவே, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது ஒழுக்கம், பொறுப்புக்கூறல், நிலைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றால் வழிநடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) தொழில்நுட்ப ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தேசிய மூலோபாய செயல் திட்டம் 2026-2030, மனிதர்கள் விற்பனையை தடுக்க, பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க மற்றும் உதவ, சட்ட அமலாக்க பதில்களை வலுப்படுத்த மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்த ஒரு ஒருங்கிணைந்த தேசிய கட்டமைப்பை நிறுவுகிறது. இந்தத் திட்டம் NAHTTF, CSOக்கள், முன்னணி பங்குதாரர்கள் மற்றும் சர்வதேச பங்காளின் விரிவான ஆலோசனைகளைப் பெறுகிறது. இது முந்தைய செயல் திட்டங்களிலிருந்து படிப்பினைகளை உருவாக்குகிறது மற்றும் சர்வதேச தரங்களுடன் ஒத்துப்போகிறது, சைபர்-இயக்கப்பட்ட கடத்தல் மற்றும் ஆட்சேர்ப்பு மற்றும் சுரண்டலுக்கான டிஜிட்டல் தளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு போன்ற வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்கிறது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, IOM இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது, மேலும் இந்த செயல் திட்டத்தின் வளர்ச்சிக்கும் தேசிய அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் ஆதரவளித்ததில் பெருமை கொள்கிறது. இதன் விளைவாக, லட்சியமான, நடைமுறைக்குரிய மற்றும் உலகளாவிய தரநிலைகளில் அடித்தளமாகக் கொண்ட ஒரு திட்டம் உருவாகியுள்ளது, அதே நேரத்தில் இலங்கையின் யதார்த்தங்களில் உறுதியாக வேரூன்றியுள்ளது," என்று இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான IOM தலைமை அதிகாரி கிறிஸ்டின் பார்கோ கூறினார். மேலும் “ஒன்றாக, பகிரப்பட்ட நோக்கத்துடன், இலங்கையில் மனித கடத்தலை ஒழிப்பதில் நாங்கள் ஒரு படி நெருக்கமாக இருக்கிறோம்” என்றும் தெரிவித்தார்.
இச் செயல் திட்டம் நான்கு முக்கிய தூண்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது:
- சமூக விழிப்புணர்வு மற்றும் இடர் குறைப்பு நடவடிக்கைகள் மூலம் தடுப்பு.
- பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட பாதுகாப்பு மற்றும் உதவி, விரிவான ஆதரவு சேவைகளுக்கான அணுகல்.
- மேம்பட்ட நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் எல்லை தாண்டிய ஒத்துழைப்பு மூலம் ஆதரவு.
- வலுப்படுத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடரல் • சிவில் சமூகம், தனியார் துறை, சர்வதேச அமைப்புகள் மற்றும் பிராந்திய வலையமைப்புகளுடனான மேம்பட்ட கூட்டாண்மைகள் மூலம் மேம்படுத்தப்பட்ட கொள்கை, தரவு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு NAHTTF மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
மனிதர்கள் விற்பனையை கண்காணித்து எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மூலோபாய செயல் திட்டத்தை (2026–2030) திறம்பட செயல்படுத்துவதை ஆதரிக்க IOM, இலங்கை அரசு மற்றும் NAHTTF உடன் நெருக்கமான கூட்டாண்மையுடன் தொடர்ந்து செயல்படும். தேசிய மற்றும் மாவட்ட அளவிலான வழிமுறைகளை வலுப்படுத்தும், முன்னணி பதிலளிப்பவர்களுக்கு விரிவான ஆதரவை உறுதி செய்யும் மற்றும் உள்நாட்டு மற்றும் எல்லை தாண்டிய கடத்தலில் இருந்து தப்பியவர்களுக்கு பாதுகாப்பு, திரும்புதல் மற்றும் மறு ஒருங்கிணைப்பு சேவைகளை வழங்கும் அனைத்து கடத்தல் எதிர்ப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு முயற்சிகளையும் இந்த அமைப்பு ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விவரங்களுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் :
மனிதர்கள் விற்பனைக்கு எதிரான தேசிய பணிக்குழு (NAHTTF) nahttfsrilanka@gmail.com
IOM Sri Lanka: iomcolombo@iom.int