பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் பாதுகாப்புச்
செயலாளரைச் சந்தித்தார்

பெப்ரவரி 17, 2026

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அவர்களை இன்று (16 பெப்ரவரி) சந்தித்தார். 

இருதரப்பினருக்கிடையிலான நட்புறவான கலந்துரையாடலின் போது, T 20 போட்டிகளுக்கும் அணிகளுக்கும் வழங்கப்பட்ட முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பான ஒழுங்கமைப்பு குறித்து திரு. நக்வி அவர்கள் உயர்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் அணிக்கு வழங்கப்பட்ட சிறப்பான விருந்தோம்பலுக்காக இலங்கைக்கு தனது நன்றியையும் தெரிவித்தார். 

பாகிஸ்தான் அணிக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், கிரிக்கெட் விளையாட்டு நாடுகளுக்கிடையிலான தோழமை, மற்றும் நட்புறவை   வலுப்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது என்று குறிப்பிட்டார்.