--> -->

ஊடக அறிக்கை (தேசிய ஊடக மையம்)

ஏப்ரல் 26, 2019

வதந்திகள் பரவுவதன் காரணமாக நாட்டின் பல்வேறுபகுதிகளிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வலைத்தளங்கள், முகநூல், டுவிடர், வட்ஸ்அப் மற்றும் ஏனைய சமூக ஊடகங்கள் ஊடாக வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக காவல்துறை மற்றும் பாதுகாப்பு படை ஆகியோரினால் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான வதந்திகளை பரப்பும் நடவடிக்கையானது பொது மக்களிடையே பீதியையும் குழப்பத்தையும் உண்டு பண்ணுவதுடன், பாதுகாப்புப் படையினரை தவறாகவும் வழிநடத்துகிறது. எனவே பொதுமக்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனா். இவ்வாறான வதந்திகளை பரப்பும் நபர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவசரகால சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.