--> -->

பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக வைத்தியசாலை நடவடிக்கைகளில் கடற்படையினர்

பெப்ரவரி 26, 2021

சுகாதார சிற்றூழியர்களில் ஒரு பிரிவினர் அண்மையில் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக இலங்கை கடற்படை, தமது மருத்துவ பணியாளர்கள் மற்றும் கடற்படை வீரர்களை பலவைத்திசாலைகளில் பணிக்கு நிறுத்தியுள்ளது.

அரச வைத்தியசாலைகளுக்கு படையினர் சேவைகளுக்காக அழைக்கப்பட்டதன் விளைவாக, பொது மக்களுக்கான சேவை தொடர்ந்து தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, இலங்கை கடற்படையின் மருத்துவ பணியாளர்கள் உட்பட 89 கடற்படை வீரர்கள் வெலிசர தேசிய சுவாச நோய்களுக்கான வைத்தியசாலை, மாஹோ மாவட்ட வைத்தியசாலை, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை, மகாமோதர போதனா வைத்தியசாலை, உடுகமை, எல்பிட்டிய, பலபிட்டிய, தெபரவெவ, மற்றும் தங்கல்ல ஆகிய பிரதேசங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளிலும் பொது மக்களுக்கான சேவை தொடர்ந்து தடையின்றி முன்னெடுக்க பணிகளுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரைக்கமைய கடற்படை வீரர்கள் அரச வைத்தியசாலைகளில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு : கடற்படை ஊடக பிரிவு