--> -->

இந்திய விமானப்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

மார்ச் 03, 2021

இந்திய விம்மனப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பஹதோரியா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஒய்வு) வை இன்று சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய விம்மனப்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

மேலும், இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.