சந்தஹிரு சேய தூபியின் நட்சத்திரத்தில் வைப்பதற்காக புனித புதையல் பொருட்கள் கையளிப்பு

மார்ச் 26, 2021

புனித சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தில் வைப்புச் செய்வதற்காக டிபி ஜயசிங்க குரூப் ஒப் கம்பெனிஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி டிபி ஜயசிங்கவினால் ஒரு தொகுதி புதையல் பொருட்கள் இன்று (மார்ச், 26) கையளிக்கப்பட்டன.

இதற்கமைய, விலைமதிப்புமிக்க ஒரு புனித புத்தர் சிலை மற்றும் விலையுயர்ந்த கற்களைக் கொண்ட ஒரு பெட்டகம் என்பன பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற வைபவத்தின்போது பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் (ஓய்வு) கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வண அம்புகளை சுமங்கல தேரரும் கலந்து கொண்டார்.