--> -->

ஆறாவது இந்தோ – லங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல்

ஏப்ரல் 08, 2019

இலங்கை மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையில் வருடாந்தம் இடம்பெறும் பாதுகாப்பு கலந்துரையாடலான இந்தோ – லங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் இன்று (ஏப்ரல், 08) கொழும்பில் இடம்பெற்றது . ஆறாவது தடவையாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய, இந்திய பாதுகாப்பு செயலாளர் திரு. சஞ்சய் மித்ரா அவர்களின் தலைமையிலான பிரதிநிதிகள் குழு பங்கேற்றது.

இரு நாடுகளுக்குமிடையே பாதுகாப்பு விடயங்களில் நலன்களை வகுத்து செயற்படுத்தும் நோக்குடன் வருடாந்தம் இடம்பெரும் இந்திய - இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடல், 2012 ஆம் ஆண்டு முதல் இடம்பெறுகின்றது.

இன்றைய தினம் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இரு நாடுகளினதும் பாதுகாப்புடன் தொடர்புடைய இரு தரப்பு முக்கியத்துவம் வாய்த விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், விமானப்படை பிரதாணி, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.