சீன பாதுகாப்பு அமைச்சர் நாடு திரும்பினார்

ஏப்ரல் 29, 2021

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த சீன நாட்டின் கவுன்சிலர் கவுன்சிலர் பாதுகாப்பு அமைச்சருமான வெய் பெங் இன்று காலை (ஏப்ரல் 29) நாடு திரும்பினார்.

நாட்டிற்கு வருகை தந்த சீன உயர்மட்ட பாதுகாப்பு தூதுக்குழுவினர், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) தலைமையிலான பாதுகாப்பு பிரமுகர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.

ஜெனரல் பெங் இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷவினை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்ததுடன் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடினார்.

உயர்மட்ட சீன பாதுகாப்பு தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒர் அங்கமாக கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உதவிகள் தொடர்பான ஆவணங்களில் பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் சீனு பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.